வெளிநாடுகளுக்கு தபால் துறை மூலம் பார்சல் அனுப்புவதில் புது சிக்கல்!

Advertisements

புதுச்சேரி:

இந்திய தபால் துறைமூலம் நம் நாட்டிலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரு பார்சலில் ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அனுப்பினால் அதைச் சேவை ரீதியாக எடுத்துக் கொள்ளாமல், வணிக ரீதியாகக் கருதப்படும் எனப் பல நாடுகள் சர்வதேச தபால் துறை அமைப்பிற்கு தற்போது தெரிவித்துள்ளன.

உதாரணத்திற்கு உங்களின் உறவினர் ஒருவர் பிரான்சில் இருக்கிறார்.அவருக்கு நீங்கள் தபால் துறை பார்சல் மூலம் 3 சட்டைகள் அனுப்புகிறீர்கள். இதில் 2 சட்டைகள் மட்டுமே சேவையாகக் கருதப்படும். 3-வது சட்டை வணிக ரீதியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதனை ஏற்றுமதி செய்யப்படும் பொருளாகக் கருதப்படுகிறது.

இதனால் பார்சல் அனுப்புவோர் ஏற்றுமதிக்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள் ஐ.இ.சி., பதிவு எண் மற்றும் ஜி.எஸ்.டி., வரிகளுக்குச் செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் அந்தப் பார்சலில் இருக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் இல்லையெனில் அந்தப் பார்சல் டெலிவரி செய்யப்படாமல் உடனடியாகத் திருப்பி அனுப்பப்படும். இதற்கு ஆகும் சேவை கட்டணங்களைச் செலுத்திய பின்னரே பார்சல் அனுப்பியவருக்கு பொருள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இந்தியாவிலிருந்து பார்சல்கள் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இதனால் தங்கள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவது டன், அன்னிய செலாவணி வருவாயும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல்வேறு நாடுகள் இது போன்ற பார்சல்களை தடை செய்து வருகின்றன.

இதுபோல் புதுச்சேரி தலைமை தபால் நிலையம்மூலம் அனுப்பப்பட்ட சில பார்சல்கள் இது போன்ற பிரச்சனையில் திருப்பி அனுப்பப்பட்டதால் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *