VIDA V1 Electric Vehicle: விடா V1 வாங்கினால் 31 ஆயிரம்!

Advertisements

ஹீரோ மோட்டோகார்ப்-இன் எலெக்ட்ரிக் வாகன பிரிவு “விடா” எனும் பெயரில் இயங்கி வருகிறது.

மேலும் விடா பிராண்டின் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆண்டு இறுதியை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள், வாரண்டி மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரத்து 259 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 7 ஆயிரத்து 500 வரை லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் அல்லது விடா வாடிக்கையாளர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமே லாயல்டி பலன்கள் பொருந்தும். இத்துடன் ரூ. 2 ஆயிரத்து 500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு 5.99 சதவீதம் எனும் மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.

விடா V1 ஸ்கூட்டரை மாத தவணையில் வாங்கும் போது இதர கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மாத தவணையாக மாதம் ரூ. 2 ஆயிரத்து 429-இல் இருந்து வாங்கிட முடியும். நிதி சார்ந்த பலன்களை வழங்குவதற்காக விடா பிராண்டு ஐ.டி.எஃப்.சி., இகோஃபை மற்றும் ஹீரோ ஃபின்கார்ப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்திய சந்தையில் விடா V1 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. விடா V1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோ மீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *