
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் அன்டில்தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஹாங்சோவ்: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் அன்டில் 73.29 மீத்தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 2022 Asian Para Games
இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 62.06 மீத்தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். தற்போது வரை இந்திய அணி 10 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 2022 Asian Para Games



