
கான்பூர்:
இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது… இளம்பெண்ணுக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருவதுடன், இந்த வீடியோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
பொதுவாக, ஒரு கணவருக்கு 2 மனைவிகள் இருப்பார்கள்… ஒரு கணவருக்கு 2 பெண்களும் அடித்துக் கொள்வார்கள்… அல்லது 2 மனைவிகளுமே ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்வார்கள்.
2 மனைவிகள்:
அதேபோல, கணவருடன் வாழும் பெண், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிய நேரிட்டால், முதல் கணவரை உதறித்தள்ளிவிட்டு 2வது திருமணம் செய்வார்கள். அல்லது கணவனுடன் வாழ்ந்துகொண்டே கள்ளக்காதலில் ஈடுபட்டு விடுவார்கள்.
ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது… இங்குள்ள தியோரியா என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்… இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது… வீடியோவில் அவர் அலங்காரம் செய்து மணப்பெண் போலக் காட்சியளிக்கிறார். இந்தப் பெண் தன்னுடைய கழுத்தில் இரு தாலிகள் அணிந்துள்ளார். இரு ஆண்கள் தோள்மீது கைப்போட்டுப் போஸ் கொடுத்திருக்கிறார்.
சகோதரர்கள்:
அந்த இரண்டு ஆண்களும், பெண்ணின் கணவர்கள் ஆவர்… அதுமட்டுமல்ல, அவர்கள் 2 பேருமே சகோதரர்கள் என்கிறார்கள். 2 கணவன்களுடன் என, மொத்தம் இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்களாம்.
இதுபற்றி அந்தப்பெண் சொல்லும்போது, இது என்னுடைய 2 தாலிகள்… என்னுடைய 2 கணவர்களுக்காகவும் இந்தத் தாலிகளை அணிந்துள்ளேன். நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நாங்கள் எங்கே சென்றாலும் மூன்று பேருமே ஒன்றாகத்தான் செல்வோம். ஒன்றாகத் தான் சாப்பிடுவோம். 3 பேருமே ஒன்றாகச் சேர்ந்துதான் தூங்குவோம்.
பூரித்த மனைவி:
என்னுடைய 2 கணவர்களுடனும் நேரத்தைத் திறம்பட நிர்வகிக்கிறேன்… எங்களுக்குள் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம் என்று பூரித்து சொல்லி உள்ளார… இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது… அத்துடன், சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி பேசும் பொருளாகவும் உருவெடுத்துள்ளது.


