
இனி வருவது தங்கம், வெள்ளி மற்றும் பங்குச் சந்தை விலை நிலவரம்;
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆயிரத்து 480 ரூபாய் குறைந்து, ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 306 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று உயர்வுடன் காணப்படுகிறது.
மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 518 புள்ளிகள் அதிகரித்து, 83 ஆயிரத்து 900 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 146 புள்ளிகள் அதிகரித்து, 25 ஆயிரத்து 812 புள்ளிகளில் வணிகமாகிறது.


