Yemen:ஏமன் விமான நிலையம்மீது அமெரிக்கா தாக்குதல்!

Advertisements

ஏமன் விமான நிலையம்மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

சனா:இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலிலிருந்து 251 பேரைப் பணய கைதிகளாகக் காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதற்குப் பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதில். ஹமாஸ் பிடியில் இருந்த பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் 100க்கும் மேற்பட்டோர் காசாவில் ஹமாஸ் பிடியில் பணய கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இந்தப் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம்மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமனின் ஹூடைடா நகரில் உள்ள விமான நிலையம்மீது இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், ஏமனின் கமரன் தீவுமீதும் அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த 21ம் தேதி ஏமனின் ஹூடைடா துறைமுகம்மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *