
எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களைக் கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்து வருகிறது. தொடர்ந்து, வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதில், வெனிசுலாவில் அமெரிக்க உருவாக்கிய எண்ணெய் வயல்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
மேலும், அவர் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் அரசு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக மாறி வருகிறது என்றார். பின்னர், எண்ணெய் வர்த்தகம் மூலம் நிதி திரட்டி, பயங்கரவாதம், போதைப்பொருள், மனிதக் கடத்தல் போன்ற செயல்களில் வெனிசுலா ஈடுபடுகிறது.
இதனால், அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம், மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.


