
நர்வேஜியன் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை தராமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கப்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு கிடைக்காது என உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் வௌ்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் சந்தித்தார்.
அப்போது பேசியஅவர், வரலாற்றில் இதுவரை வேறு யாரும் ஏழு போர்களை நிறுத்தி இருக்க மாட்டார்கள் என்றும் 5 போர்களை அமெரிக்காவில் வர்த்தகம் செய்வதை வைத்து மிரட்டியே நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நர்வேஜியன் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை தராமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடி கண்டுபிடிக்கப்படும் என வெளிப்படையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பி தீர்த்துள்ளார்.
இதனையடுத்து, அமைதி அதிபர் என்ற அடைமொழியுடன் கூடிய டிரம்ப்பின் புகைப்படம் வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.
