நாளுக்கு நாள் தங்கத்தின் விலை சற்று உயர்வாகவும் , அதே சமயம் குறைந்தும் காணப்படுகிறது.மேலும் சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.
கடந்த 2 மாதங்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யபப்ட்டுள்ளது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை அதிரடியாக உயர்ந்தது. கடைசியாக நேற்று (அக்டோபர் 30) மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனையானது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதே நிலையே தொடர்கிறது. நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300க்கும், ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதே நிலையே தொடர்கிறது. நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300க்கும், ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.