
தாய்லாந்து, கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிவந்த நிலையில், இரு நாடுகளின் எல்லையில் தொடர்ந்து தீவிர போர் நீடித்து வருகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து,கம்போடியா இடையே எல்லையில் தொடர்ந்து தீவிர சண்டை நீடித்து வருகிறது. இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரின் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரண்டு மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை துவங்கியது. இதில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டனர்.
இதனால், எல்லையோரம் வசிக்கும் நுாற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். இதற்கு முன்னதாக, தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட்டிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், அப்போது இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், கம்போடியா பி.எம்., 21 ராக்கெட்டுகளை ஏவியதாகவும் மாறி மாறி இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.




