
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் மந்த்ரா நிறுவனத்தைக் கண்டித்தும், அரசு கேபிள் டிவி தாசில்தார்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி, பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கோவர்த்தனன் உள்ளிட்ட இருநூற்றுக்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி, தங்கள் கோரிக்கைகளைப் பற்றிப் பேசுவதற்காக முதலமைச்சரைச் சந்திக்க 4 மாதங்களாகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
