
மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனோ தங்கராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி ஏற்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மனோ தங்கராஜ் வாழ்த்து பெற்றார். மேலும் அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் சேவையாற்ற தமிழக அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளித்த கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக அதில் தெரிவித்துள்ளார்.


