Sachin And Suriya Playing Cricket: சச்சின் பவுலிங்… சூர்யா பேட்டிங் செய்த வீடியோ வைரல்!

Advertisements

மும்பை: ஐஎஸ்பிஎல் டி10 கிரிக்கெட் தொடரின் முதல் நாளில் நடிகர் சூர்யா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் கிரிக்கெட் ஆடும் வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இது 10 ஓவர்களைக் கொண்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடராகும். இந்த ஐஎஸ்பிஎல் டி10 தொடரின் முதல் சீசன் மார்ச் 6 முதல் 15-ம் தேதிவரை நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 18 போட்டிகள் விளையாடப்படுகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் விளையாடுகின்றன. இந்திய சினிமா பிரபலங்கள் இந்த அணிகளை வாங்கி உள்ளனர். அந்த வகையில் சென்னை சிங்கம்ஸ் அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஐஎஸ்பிஎல் டி10 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (மார்ச் 6) மும்பையில் உள்ள தாதோஜி கோண்டேவ் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சூர்யா, ராம்சரண், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சூர்யா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் கிரிக்கெட் ஆடும் வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது. அதில் சூர்யா பேட்டிங் செய்ய, அவருக்குச் சச்சின் பவுலிங் போடுகிறார்.

மேலும், ராம்சரண், அக்‌ஷய் குமார், சூர்யா, பொமான் இரானி ஆகியோர் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவும் சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *