
பூட்டிய கடையை உடைத்து கொள்ளையடிக்கும் காலம் மாறிப் பட்டப்பகலில் திறந்திருக்கும் கடையிலேயே கொள்ளை நடந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள இரும்புக்கடை ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பட்டறையிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய அந்தக் கடையின் கார் ஓட்டுனர் பாக்கியதாசை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாகக் கோவில் உண்டியல் உடைப்பு, பூட்டிய வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பூட்டை உடைத்து கொள்ளை, கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன ஆனால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசார் பின்னடைவு நிலையிலேயே இருந்து வருவதால் பெரும்பாலான கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
பூட்டிய கடைகளைக் கொள்ளை அடிக்கும் காலம் மாறித் தற்போது திறந்திருக்கும் கடையிலேயே கொள்ளை அடிக்கும் நிலைக்குக் கொள்ளையர்கள் முன்னேறியுள்ளனர். நாகர்கோவில் வடசேரி பகுதியில் 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் இரும்பு கடை ஒன்றில் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நண்பகல் நேரத்தில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது பட்டறையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அக்கடையினுடைய கார் ஓட்டுநர் புதுக்கிராமத்தை சேர்ந்த பாக்கியதாஸ் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டார். தப்பி ஓடிய அவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

