
அபுதாபியில் நடைபெற்ற 19 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகத் தொகைக்கு வாங்கியுள்ளது.
அபுதாபியில் 19 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த, ஏலப்பட்டியலில் 350 வீரர்கள் இடம் பெற்றன. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீன் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரனா 18 கோடி ரூபாய்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தனர்.
இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய இந்திய இளம் வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா தலா 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். தொடர்ந்து, இந்திய வீரர் சர்பராஸ் கானை 75 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
இந்நிலையில், இந்திய வீரர் சர்பராஸ் கான் தனது சமூக வலைப்பதிவில், தனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்தார்.


