Kim Jong Un:புதின் வட கொரிய அதிபருக்குப் பரிசளித்த காரில் தென் கொரிய பாகங்கள்..வெடித்தது சர்ச்சை!

Advertisements

ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே வருகிறது. மேற்கு நாடுகளுக்குப் பரம எதிரிகளாக விளங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்களது நாடுகளுக்கிடையில் பரஸ்பர உறவை நிலைநாட்ட முயற்சித்து வருகின்றனர்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதராவாக ஆயுதங்களை அனுப்பும் அளவுக்கு இந்தப் புதிய உறவு வலுப்பெற்றுள்ளது. 24 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக ரஷிய அதிபர் புதின் வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

வட கொரிய தலைங்கர் பியங்காங்கில் கிம் ஜாங் உன் – ஐ சந்தித்து அவருக்கு ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus limousine] என்ற சொகுசு காரைப் பரிசளித்தார் புதின். மேலும் இருவரும் அந்தக் காரில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர். கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புதின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார். பின்னர் கிம் ஜாங் உன் காரை ஆர்வமாக ஓட்டிப்பார்த்தார். இந்த வீடியோ இணையதளத்தில் தீயாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் புதின் பரிசளித்த அவுரஸ் லிமவுசைன் கார்குறித்த சர்ச்சைக்குரிய உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அவுரஸ் லிமவுசைன் கார்களை அவுரஸ் மோட்டார்ஸ் என்ற ரஷிய நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கார் தயாரிப்பிற்கான உதிரிபாகங்களை அந்நிறுவனம் தென் கொரியா, சீனா, இந்தியா, துருக்கி, இத்தாலியெனப் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக ரியூட்டர்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

வட கொரியாவும் தென் கொரியாவும் பரம் எதிரிகளாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க வட கொரிய அதிபருக்குத் தென் கொரிய உதிரி பாகங்களைக் கொண்ட காரைப் புதின் பரிசளித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *