Kallakurichi incident:156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை!

Advertisements

கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில், சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சோி பகுதியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 221 போ் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகளிலும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு உள்ளனா். இதில் நேற்று முன்தினம் வரை 57 போ் உயிாிழந்தனா்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூரை சோ்ந்த சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பாிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனை பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இச்சம்பவத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.

இதில் 5 பெண்கள் அடங்குவா். மேலும் 5 பெண்கள், 1 திருநங்கை உள்பட 156 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 111 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 29 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 8 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேரும் மற்றும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை உயர கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *