
இஸ்ரேல் பதிலடியால் நிலைகுலைந்த காசா முனை!
ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் காசா முனை நிலைகுலைந்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 900 கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகக் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 700 பேர் உயிரிழந்தனர்.

காசாவுக்கு வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் நிறுத்தம் – இஸ்ரேல் அதிரடி!
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகக் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் இதுவரை 700 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், இஸ்ரேலிலிருந்து காசா முனைக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர், மின்சாரம், எரிபொருள், உணவு வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. காசா முனை முழுவதும் முடக்கப்படுவதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் போரை முடித்து வைப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இஸ்ரேல் போரில் உள்ளது. இந்தப் போரில் எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், மிகவும் கொடூரமான முறையில் இந்தப் போருக்குத் தள்ளப்பட்டோம். இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை, ஆனால் போரை முடித்துவைக்கும். எங்களைத் தாக்கி ஹமாஸ் வரலாற்று தவறு செய்துவிட்டது. தாக்குதல் நடத்தியதற்காக விலையை நாங்கள் நிர்ணயிப்போம். அந்த விலை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் எதிரிகளால் பல ஆண்டுகளுக்கு நினைவு கொள்ளப்படும். ஹமாஸ் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள். இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றிபெறும்’ என்றார்.



