
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. இதில், முதல் டெஸ்ட் போட்டி நேற்று (அக்டோபர் 17) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இது இந்திய அணிக்கு எதிராக அமைந்தது. அதாவது முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அந்த வகையில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 134 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்க உள்ளது.




