
கர்ப்பிணியான மலையாள நடிகையும், மருத்துவருமான ப்ரியா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
35 வயதாகும் எட்டு மாத கர்ப்பிணியான மலையாள நடிகை டாக்டர் பிரியா மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த நடிகை ரென் ஜுஷா மேனன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் மறைவதற்குள் நவம்பர் 1- ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் இறந்த நிகழ்ச்சி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Dr Priya
அவருடைய குழந்தை தற்போது ஐசியு வில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மலையாள நடிகர் கிஷோர் சத்யா கூறுகையில் திரையுலகில் அடுத்த அதிர்ச்சியான பேரிழப்பு என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகையின் கணவர் நன்னா ஒரு நல்ல துணையை இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.



