விபத்தில் பலியான பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி- முதலமைச்சர் அறிவிப்பு!

Advertisements

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த விமலா இன்று காலை புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த 4 சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணநிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *