
ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்! அமெரிக்காவில் அதிரடி அறிவிப்பு …
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்காவில் மக்களால் பெரிதும் ஈர்க்கபட்டுள்ளார். பெரும் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், ஹெச்1பி நுழைவு விசா வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகச் சுலபமான புதிய முறை அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறந்த இவர், அந்நாட்டுப் பிரஜைகளுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் இவருக்கு உண்டு. மேலும் இவர் ஏற்கெனவே பிரபலமான தொழில் அதிபர், என்பதால் உலக அளவில் மிகவும் பரிச்சயமானவர். இவர் தேர்தலில் நிற்பது குறித்து எலன் மஸ்க் மற்றும் பில் அக்மேன் போன்றோர் பாராட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோப்பைடன் வெற்றி பெற்று அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், அங்கு இப்போதே அதிபர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி நுழைவு விசாவை பெறுவதற்கான தற்போதைய நடைமுறைக்கு விவேக் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ”லாட்டரி முறையைப் போன்றே ஹெச்1பி நுழைவு விசா நடைமுறை உள்ளது. அந்த நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, திறமையை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க வேண்டும்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளா்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் தேவைக்கு ஏற்பத் திறன்மிக்க வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு நுழைவு இசைவு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஹெச்1பி விசா நடைமுறைக்கு எதிராக இரண்டாவது முறையாக விவேக் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஹெச்1பி நுழைவுவிசா நடைமுறை சரிவர இல்லை. பணியாளர்களின் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்நடைமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபரான பிறகு, ஹெச்1பி விசா நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்’’ எனத் தெரிவித்தார்.
இதனால் அமெரிக்கா செல்ல வேண்டும் எனும் கனவில் உள்ள திறமைசாளிகள் விரைவில் அமெரிக்கா பறப்பது உறுதி…

