
விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட 5 கோடி மதிப்பிலான பணியைத் தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம்அரசு மருத்துவமனை வளாகத்தில், 5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியினை தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வெளி மற்றும் உள் நோயாளி சிகிச்சைகாக வந்து செல்கின்றனர். இதனால் கூடுதல் கட்டிடங்கள் கேட்டுப் பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதனையொட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்காகத் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மற்றும் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட ஒப்பந்தல் அளித்தது. 5 தளங்கள் கொண்ட இந்தப் புதிய கட்டிடத்தில் குருதி வங்கி, டயாலிசிஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் விளங்கும்.
இந்தக் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகிற்காக அடிக்கல் நாட்டு விழாவினை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று குத்து விளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் மருத்துவ இணை இயக்குநர் ராஜ்குமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன், திமுக நகர செயலாளர் தண்டபாணி நகர துணை செயலாளர் ராமு மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


