பாஜகவுடன் சசிகலா கூட்டணி..அதிமுகவில் அதிரடி திருப்பம்..!

Advertisements

கிட்டத்தட்ட தமிழக அரசியலில் மத்திய உள்துறை அமைச்சரும்,  பாஜக மூத்த தலைவருமான , அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது என தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சியில் சசிகலாவை கூட்டணியாக சேர்த்துக் கொள்வதுடன் வேறு பல திட்டங்களும் ரகசியமாக அரங்கேறி வருகின்றன.

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் , அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறுதி கட்ட வேகத்தை எட்டி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக தவெக நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுமென தெரிகிறது.

தற்போது,  திமுக கூட்டணியில் காங்கிரஸ்,  விடுதலைச் சிறுத்தைகள்,  இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் , மதிமுக  , கொங்கு மக்கள் கட்சி எனப் பலமான கூட்டணி அமைந்துள்ளன. அதிமுகவை பொருத்தவரையில் தற்போது வரை பாஜக மட்டுமே கூட்டணியில் இருக்கிறது . இது தவிர தேமுதிக,  பாமக ஆகிய இரண்டு கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.  பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் ராமதாஸ் அன்புமணி இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் அதிமுக ஒருங்கிணைந்தால் வெற்றி வாய்ப்பு மிக சுலபமாக இருக்கும் என டெல்லி பாஜக மேலிடம் கருதுகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை முயற்சி செய்தும் , எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்து வருகிறார்,

இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்பொழுது,  வேறு விதமான திட்டங்களை தீட்டி இருக்கிறார்.இதன் நிமித்தமாக ஓ பன்னீர்செல்வத்தை முதன்முதலாக அழைத்து பேசியிருக்கிறார்  . அடுத்தபடியாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மூலம் டிடிவி தினகரன்ிடம் பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டமாக சசிகலாவுடன் தற்பொழுது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். சசிகலாவை பொருத்தவரையில் எனக்கு யார் மீதும் கோபம் இல்லை.  அதிமுக ஒன்றாக இருந்தால் எனக்கு அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி நான் பதவி எல்லாம் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் சசிகலா , ஓ பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட அது அதிமுக ஒருங்கிணைப்பு போல் செயல்பட வாய்ப்பு இருக்கிறது என டெல்லி பாஜக மேலிடம் கருதுகிறது. இதற்கிடையே ராமதாசும்,  அன்புமணியும் ஒன்றாக சேர வேண்டும் என்றும் டெல்லி பாஜக கருதுகிறது . இது தொடர்பான பேச்சுவார்த்தையும் விரைவில் நடக்கவிருக்கிறது.

முன்னதாக இது பற்றி எல்லாம் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதிமுகவை பொருத்தவரையில் தேமுதிக,  பாமக , ஜான் பாண்டியன் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமி , கட்சி பாரிவேந்தர் கட்சி என பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே நாம் தமிழர் காளியம்மாளும் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணையலாம் என தெரிகிறது. ஓ பன்னீர் செல்வத்தை பொருத்தவரையில் அதிமுக ஒருங்கிணைப்பு போராட்ட குழு என்ற அமைப்பை ரத்து செய்துவிட்டு புதிய அமைப்பு ஒன்றை எம்ஜிஆர் பெயரில் தொடங்கி பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி வைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சியில் எனக்குறிய மரியாதை தரப்பட்டால் தாராளமாக நான் பாஜகவுடன் இணைந்து பணி செய்யலாம் என டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. தற்பொழுது இறுதி கட்டமாக சசிகலாவும் பாஜக மூலம் ஒன்றிணைவதால் அதிமுக ஒருங்கிணைப்பு என்ற விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என தெரிகிறது.

இதற்கிடையே , இத்தகைய கூட்டணிகள் சேர்வதால் பாரதிய ஜனதா கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தற்போது புதிய கோரிக்கையை டெல்லி பாஜக மேல் இடம் வைத்திருக்கிறது. 60 தொகுதிகள் தரப்பட்டால் அதில் பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடும் மீத தொகுதிகளை ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா காளியம்மாள் ஆகியோருக்கு பிரித்து தரப்படும் என தெரிகிறது.

எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரையில் இதற்கெல்லாம் ஒத்து வராமல் மேலும் , பிடிவாதம் செய்தால் ஏன் அதிமுக கூட்டணியை விட்டு விலக கூடாது . அப்படி விலகும் பட்சத்தில் மேற்படி கூட்டணியை ஒன்று சேர்த்து ஏன் பாஜக தலைமையில் போட்டியிட கூடாது என்ற யோசனையும் டெல்லி பாஜக மேல் இடத்தில் நடைபெற்று வருவது மிகப்பெரிய அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *