
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் 15 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீட்டில் அமைகிறது என அந் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை அறிவித்து உள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட ஏஐ மையத்தை கூகுள் நிறுவனம் அமைக்கிறது. டில்லியில் நடந்த ஏஐ தொடர்பான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்தார்.
ஆசியாவில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவில் அமைவது முக்கியத்துவம் பெறுகிறது. 15 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி முதலீட்டில் அமைகிறது.
இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் விசாகப்பட்டினத்தில் முதன் முதலில் அமைக்கப்படும் கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மையம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாகவும் அப்போது அவர் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்தாகவும் இது ஒரு மைல்கல் வளர்ச்சியாகும் என்றும் ஏஐ கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவோம். நாடு முழுவதும் வளர்ச்சியை முன்னெடுப்போம் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரத்தில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஏஐ மையம் அமைய இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும். இந்த மையம் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை எடுத்துரைக்கிறது.
நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். உலகளாவிய தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்க உதவியாக இருக்கும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர பெருமிதம் தெரிவித்தார்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறி திறன் (Artificial intelligence) மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமா நாள் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.
கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு களுக்கு தேவைப்படும் பணிகளை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, திட்டமிடல், சிந்தித்தல் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவுத் திறங்களை உள்ளடக்கியுள்ளது.
நுண்ணறிவுப் பயன்பாடுகளில் மேம்பட்ட வலைத் தேடல், பரிந்துரை அமைப்புகள், மனித பேச்சைப் புரிந்துகொள்வது, பொது அறிதிறன் உருவாக்கும் ஆக்கக் கருவிகள், செயற்கை அறிதிறன் கலை, உயர்நிலை ஆட்ட நுட்ப விளையாட்டுகளில் போட்டியிடல் போன்றவை உள்ளடங்கும்.
செயற்கை நுண்ணறிவு 1956 ஆம் ஆண்டில் ஒரு கல்வித் துறையாக டார்த்மவுத்து பணிப்பட்டறையில் நிறுவப்பட்டது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் பல்வேறு துணைத் துறைகளையும் குறிப்பிட்ட குறிக்கோள்களையும் குறிப்பிட்ட கருவிகளின் பயன்பாட்டையும் மையமாகக் கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் மரபான குறிக்கோள்களாவன பகுத்தறிவு, அறிவு உருவாக்கப்படுத்தல், திட்டமிடல், கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், புலக்காட்சி தானியங்கி ஆகியவை அடங்கும். இந்த சிக்கல்களைத் தீர்க்க, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் தேடல், கணித உகப்பாக்கம், முறையான தருக்கம், செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் ஆகிய சிக்கல் தீர்வு முறைகளையும் புள்ளியியல், நிகழ்தகவு, பொருளியல் சார்ந்த முறைகளையும் ஒருங்கிணைத்து உள்ளனர்.
குறிப்பாக நுண்ணறிவை உருவாக்குதல் பற்றிய பொதுவான சிக்கல்கள், துணை சிக்கல்களாக பிரிக்கப்பட்டன. இந்தத் துணைச் சிக்கல்கள் என்பவை ஒரு அறிவு பொதிந்த அமைப்பு வெளிப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட பண்புகள் அல்லது திறன்களாகும்.
கீழே விவரிக்கப்பட்டுள்ள திறன்கள் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, செயற்கை அறி திறன் ஆராய்ச்சியின் நோக்கத்தையும் இலக்குகளையும் மேம்படுத்தியுள்ளன.தொடக்க கால ஆராய்ச்சியாளர்கள் மாந்தர்கள் புதிர்களைத் தீர்க்கும்போது அல்லது அளவையியலான விதிவிலக்குகளைச் செய்யும்போது படிப்படியான பகுத்தறிவைப் பின்பற்றும் வழிமுறைகள் உருவாக்கினர்.
1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும் பொருளாதாரத்திலிருந்தான கருத்துகளைப் பயன்படுத்தி, உறுதியற்ற அல்லது முழுமையற்ற தகவல்களை கையாளுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த வழிமுறைகள், பல பெரிய பகுத்தறிவு சிக்கல்களைத் தீர்க்க போதுமானதாக இல்லை. ஏனெனில் அவை தீர்வின் போக்கில் ஓர் ஒருங்கிணைந்த வெடிப்பை சந்திக்கின்றன.
சிக்கல்கள் பெரிதாக வளர வளர அவை படிப்பெருக்கமுறையில் செயல் வேகத்தில் மெதுவானவையாக மாறின. தொடக்கநிலை செயற்கை அறி திறன் ஆராய்ச்சியைப் போன்ற படிப்படியான கொணர்தலை மாந்தர் கூட அரிதாகவே பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் தங்கள் பெரும்பாலான சிக்கல்களை விரைவான உள்ளுணர்வு தீர்ப்புகளைப் பயன்படுத்தியே தீர்க்கிறார்கள். துல்லியமான முழு திறமையான பகுத்தறிவு என்பது தீர்க்கப்படாத ஒரு சிக்கலாகவே இன்னமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



