
மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த அனைத்து வேட்பாளர்களும் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்று இருக்கிறார்கள் இதனால் டெல்லி பாஜக மேல் இடம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 27 மாநகராட்சிகள் இருக்கின்றன . இந்த மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது .
மும்பை மாநகராட்சியை பொருத்தவரையில் 227 வார்டுகள் இருக்கின்றன . இதில் மேயர் பதவியை கைப்பற்ற வேண்டுமானால் 114 வார்டுகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் . ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை . அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஏக்நாத் சிண்டே கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்திருக்கிறது .
முன்னதாக , கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கடந்த 2023 ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகளாக சிவசேனா கட்சி ஆட்சி நடத்தியது மேயரும் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் மேயராக இருந்தார் . இந்த நிலையில் மும்பை மாநகராட்சியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் .
அவர் பிரச்சாரம் செய்யும் பொழுது, மும்பை நகரம் சர்வதேச நகரமாகும் எனவே மகாராஷ்டிரா மாநிலத்துக்காரர்கள் மட்டும் இதனை சொந்தம் கொண்டாட முடியாது என பேசினார். அவரது பேச்சு அந்த மாநில முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. மும்பை எங்களுக்கு சொந்தமானது . இதை பங்கு போட முடியாது . இது பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது . தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து ஏன் பேச வேண்டும்? அவர் மீண்டும் மராட்டிய மாநிலம் வந்தால் அவரது லுங்கிய கழட்டி காலை வெட்டுவோம் என்றெல்லாம் பேசினார்கள் .
இந்த நிலையில், அண்ணாமலை பிரச்சாரம் செய்த மூன்று வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர் . மும்பை மாநகராட்சியில் உள்ள 35 வது வார்டு 47 வது வார்டு மற்றும் 19வது வார்டு ஆகியவற்றில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார் .
இதில் 47வது வார்டில் திவானா என்பவர் வெற்றி பெற்றார் . இவர் மும்பை பாஜக இளைஞரணி தலைவராக இருக்கிறார் . அதேபோல் 35 வது வார்டில் யோகேஸ்வர்மா வெற்றி பெற்றுள்ளார். 19-வது வார்டில் தக்ஸிதா என்பவர் வெற்றி பெற்றுள்ளார் . இதன் மூலம் அண்ணாமலைக்கு எதிரான பிரச்சாரம் அங்கு எடுபடவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது .
தற்பொழுது, அண்ணாமலை பிரச்சாரம் செய்த தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதால் அங்குள்ள பாஜகவினர் மத்தியில் அண்ணாமலைக்கும் மவுசு கூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



