AIADMK: அவர் இருக்கும்வரை ஒன்றிணைய வாய்ப்பு இல்லை!

Advertisements

எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுக-வில் உள்ள யாருக்கும் விருப்பம் இல்லையென அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

“எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இல்லை. பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுக-வில் உள்ள யாருக்கும் விருப்பம் இல்லை. துரோகமும், ஏமாற்று வேலையும்தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நடைமுறையே. சிறுபான்மை மக்களையும் அதுபோல அவர் ஏமாற்றலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *