அதிமுக கோட்டையை கைப்பற்றும் திமுக: பரபரப்பு கருத்துக்கணிப்பு.!

Advertisements
கடந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வென்றெடுத்த அதிமுக இந்த முறை தோல்வியை சந்திக்க போவதாகவும் ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெறப் போவதாகவும் ஒரு பரபரப்பு கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது .
கோவை மாவட்டத்தில் , மொத்தம் பத்து சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.  இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது திமுக ஒட்டுமொத்தமாக தோல்வியை தழுவியது . இந்த நிலையில் , ஒரு தனியார் அமைப்பு கோவை கள நிலவரம் குறித்து கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது .
இந்த நிறுவனம் ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஆகியவற்றை துல்லியமாக கணித்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது,  கோவை மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது . கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் , தெற்கு மேட்டுப்பாளையம் , கவுண்டம்பாளையம் , கிணத்துக்கடவு , பொள்ளாச்சி , வால்பாறை ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் இது தற்போதைய நிலவரம் ஆகும் .
இதேபோல் , தற்போது தேர்தல் நடைபெற்றால் சூலூர் ,  சிங்காநல்லூர்,  தொண்டாமுத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது . கடந்த முறை கோவை மாவட்டத்தில்,  படுதோல்வி அடைந்ததால் இந்த முறை மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என மு க ஸ்டாலின் முடிவு எடுத்து செந்தில் பாலாஜி தலைமையிலான ஒரு குழுவை அமைத்து தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது .
பொதுவாக  , கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை பொறுத்த வரையில் 133 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதிலும் மேற்கு தமிழ்நாட்டில் 68 தொகுதிகளில் வெறும் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது . கோயம்புத்தூர்  மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலில் அதிமுக ஒன்பது இடங்களிலும் , பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது ,
இதற்கிடையே கோவை மாவட்டத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக தரப்பிலும் தனி குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பணிகள் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த மாவட்டத்தில் கவுண்டர் இனத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் . அதேபோல் நாயுடுகள் பெரும்பாலும் இங்கு வசித்து வருகிறார்கள் .
தற்பொழுது , திமுக தரப்பில் கவுண்டர் இன மக்களுக்காக பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன . அதேபோல் , இந்த மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன . இது தவிர கோவையில் தொழிலதிபர் ஜிடிநாயுடு பெயரில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது .
இதுவல்லாமல் , கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதால் அவர் தனித்தனி குழுக்களாக அமைத்து மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இது அல்லாமல் கோவை தொகுதியில் ராஜ் கவுண்டர் நடத்திய புதிய திராவிட கழக மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *