Advertisements

கோலிவுட் உலகில் குறைந்த அளவிலேயே திரைப்படங்களை நடித்திருக்கிறார் என்ற பொழுதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நடிகை தான் ஈஷா ரெப்பா.
ஆந்திராவில் பிறந்த பிரபல நடிகை ஈஷா தெலுங்கு திரையுலகத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கினார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்” என்கின்ற திரைப்படத்தில் நடித்து இவர் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ச்சியாகத் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ஈஷா கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ஓய்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களம் இறங்கினார்.தொடர்ச்சியாகத் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வரும் நடிகை ஈஷா ரெபா, இறுதியாகத் தமிழில் “ரெண்டகம்” மற்றும் “நித்தம் ஒரு வானம்” என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் தெலுங்கு மொழியில் உருவாகும் பல இணைய தொடர்களிலும் நடித்துவரும் ஈஷா ரெபா, விரைவில் தமிழில் அதிக அளவில் திரைப்படங்களை நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ReplyForward |
Advertisements

