
திருவாடானை அரசு மதுக்கடையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்தில் மிதித்துக் கொலைசெய்யப்பட்டார்.இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றித் திருவாடனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் கண்ணன் (37) பாரதி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ்குமார் (47) இருவரும் மது அருந்திவிட்டு இருந்தபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
அப்போது சுரேஷ்குமாரை கீழே தள்ளிக் கண்ணன் சுரேஷ்குமாரின் கழுத்தில் மிதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சுரேஷ்குமார் மனைவி தமிழரசி கொடுத்த புகாரில் கண்ணனை திருவாடானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூன்று நாட்களாகச் சிகிச்சையில் இருந்த சுரேஷ்குமார் நேற்று இரவுச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றித் திருவாடனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ ஆட்சியில் நாள்தோறும் நடக்கும் குற்ற சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

