Advertisements

அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனமான எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் வரும் 2027ம் ஆண்டிற்குள், இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் வைத்துள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளில் எஸ் 400 அமைப்பு மிகவும் துல்லியமாக செயல்படக்கூடியது. இதன் செயல்பாடுகளை ஆராய்ந்த இந்திய ராணுவம் 2018ம் ஆண்டில், ஐந்து எண்ணிக்கையில் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதுவரை ரஷ்யா 3 எண்ணிக்கையில் மட்டுமே எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள இரண்டு அமைப்புகளையும் வழங்கும்படி இந்திய ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பாக, சீனா தலைமையில் நடந்த பன்னாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற, ராஜ்நாத் சிங் ரஷ்யா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனமான எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் வரும் 2027ம் ஆண்டிற்குள், இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
Advertisements


