தாடி வளர்த்து பெண்களைக் கவரும் இளைஞர்கள்
பொதுவாக இஸ்லாமியர்கள்தான் தாடி வளர்ப்பார்கள். இப்போது அப்படியல்ல. இளைஞர்கள் எல்லோருமே விதம் விதமான ஹேர் ஸ்டைலோடு விதம் விதமாக தாடி வளர்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் தாடி வளர்ப்பவரை சோகமான மனிதர்கள் என்பார்கள் இப்போது தாடி என்பது இளைஞர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
தாடி வளர்க்கும் ஆண்களைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? என “டிக்சன் புரூக்ஸ்” என்ற அமைப்பு சார்பில் இந்தியா முழதும் ஒரு சர்வே நடத்தப்பட்டது. இதில் தாடி வளர்க்கும் ஆண்கள் பெர்சனாலிட்டி மிக்கவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் எனப் பெண்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இளைஞர்கள் தாடி வளர்க்க ஆசைப்பட்ட நிலையில் கொரோனா காலம் அதற்கு ஊக்கமளித்திருக்கிறது.கடந்த பல மாதங்களாக தாடி வளர்த்து வந்த அவர்கள் தற்போது தங்கள் முக அழகிற்கு தக்கபடி ‘டிரிம்’ செய்து வருகிறார்கள்.ஆண்கள் தங்கள் தாடியை டிரிம் செய்வதற்கென நிறைய டெக்னிக்குகளும் நவநாகரீக சலூன் கடைகளும் வந்து விட்டன என்கிறார் மும்பையின் பிரபல அழகுக் கலை நிபுனரான மோகன் தத்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் உள்ள இளைஞர்களிடம்தான் இந்த தாடி வளர்க்கும் கலை அதி வேகமாகப் பரவி வருகிறது. தாடியை ஒரு முறை டிரிம் செய்வதற்கு ரூ 150 முதல் ரூ 500 வரை செலவு செய்கின்றனர்.
தாடி வளர்த்து பெண்களைக் கவரும் இளைஞர்கள்
Advertisements