எல்லோருமே கோடீஸ்வரர் ஆகி விட முடியுமா..? முடியும்! ஏற்கெனவே இருக்கும் கோடீஸ்வரர்கள் எல்லாம் பிறக்கும்போதே அப்படி பிறக்கவில்லை! ஆகவே… நீங்களும் தாராளமாக கோடீஸ்வர்களில் ஒருவர் ஆகி விட முடியும்.
நான் எப்படி கோடீஸ்வரர் ஆவது..? தலையை போட்டு பிய்த்துக் கொள்ள வேண்டாம். சிந்தித்துப் பார்த்தால் மிக எளிதான வழிதான்! நீங்கள் சராசரியாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தால் போதும். எளிதில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். இதற்கான சில சேமிப்பு டெக்னிக்குகள் இருக்கின்றன.காலம் பழைய மாதிரி இல்லை. உங்கள் பணத்தை பன் மடங்காக மாற்றும் ஏராளமான வழிகள் இருக்கின்றன.உதாரணமாக ஒன்றை நினைத்துப் பாருங்கள்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சென்ட் நிலத்தில் நீங்கள் ரூ 2 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் இப்போது அதன் மதிப்பு பல லட்சங்களைத் தாண்டி இருக்கும்!ஆக… சம்பாதிக்கும் காலத்தில் “முதலீடு” செய்ய வேண்டும் என்பதுதான் நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கான அடிப்படை பார்மூலா.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “நமது பணம் கூட்டு வட்டியில் வளரும் போது அது சிறிதாக இருந்தாலும் காலத்தின் அடிப்படையில் அதனுடைய வளர்ச்சி மிகப் பெரியதாக இருக்கும்” என்று கண்டுபிடித்தார். அதுவே இன்று உலக அளவில் நிதி வர்த்தகத்தின் முதலீட்டு மந்திரமாக இருக்கிறது.
சேமிப்பு அல்லது முதலீடு என்பது பல வகை ஆதாயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். மாதச்சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, தங்கம், ரியல் எஸ்டேட்,பங்குச் சந்தை, இன்சூரன்ஸ், மீச்சுவல் பண்ட் என இதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன.இவை எல்லாமே காலப்போக்கில் நமது பணத்தை பன் மடங்காக பெருக்கித் தந்து விடும். இத்தகைய சேமிப்பு அல்லது முதலீடு இல்லாதவர்கள்தான் 50 வயதுக்குப் பிறகு “அய்யய்யோ! என் மகள் திருமணத்திற்கோ அல்லது வேறு முக்கிய செலவுகளுக்கோ கையில் கொஞ்சம் கூடப் பணம் இல்லையே” என்று வேதனைப்படுகிறார்கள்.
சம்பாதிக்கும் காலத்தில் “மாத வருமானமே எனக்குப் போதவில்லையே என்று சாக்குப்போக்கு சொல்லாதீர்கள். ரூ 10 ஆயிரம் சம்பாதித்து வந்த உங்கள் வருமானம் அப்போது ரூ8 ஆயிரமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பல்லைக் கடித்துக் கொண்டு குடும்பம் நடத்தியிருப்பீர்கள் அல்லவா?
25 வயதாகும் ஒருவர் ஆண்டுக்கு 15 சதவீத கூட்டுவட்டி வரும் வகையில் மாதம் தோறும் ரூ700 சேமித்து வந்தால் போதும் 60 வயதாகும் போது அவரது கையில் ரு ஒரு கோடி இருக்கும்.இதையே 30 வயதாகும் ஒருவர் மாதம் ரூ.1,500ஐ 30 வருடங்கள் சேமித்து வந்தால் போதும். அதுபோல் 35 வயதாகும் ஒருவர் மாதம் ரூ3,500 ஐ 25 வருடம் சேமித்தால் போதும் 60 வயதில் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.
ஒன்றும் இல்லை. ஒருவர் இறந்தாலும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.எல்.ஐ.சி.யில் ஆண்டு பிரீமியமாக 50 ஆயிரம் செலுத்தி வந்தால் போதும்30 ஆண்டுகள் கழித்து அவரது 65 ஆவது வயதில் மரணமடைந்தாலும் அவரது குடும்பத்திற்கு ரூ 1 கோடி கிடைக்கும். இதேபோல் எல்.ஐ.சி. ‘லைப்’ இன்சூரன்சில் ரூ 25 ஆயிரம் சேமித்து வந்தாலும் நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விட முடியும்.
இப்போதெல்லாம் ஏராளமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பலப்பல புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றன.இதில் பணத்தை எதில்?எங்கு? எவ்வளவு முதலீடு செய்வது? என்பதை திட்டமிடுங்கள் !உங்கள் திட்டமிடுதல் சரியாக இருக்க வேண்டும்.
ஒரு விதையிலிருந்து முளைத்து இலை, கிளை,காய் மற்றும் பழம் என்று மரமாக வளர்வது போல்தான் உங்கள் முதலீடும்! நிதானமாக யோசியுங்கள். புத்திசாலித்தனமான சேமிப்பும், முதலீடும் உங்களை நிச்சயம் கோடீஸ்வரானாக்கும்.
நீங்கள் கோடிஸ்வரர் ஆக 3 மந்திரங்கள் இருக்கிறது.1.இளமையிலேயே முதலீட்டை தொடங்கி விடுங்கள். 2.மாதம் தவறாமல் முதலீடு செய்யுங்கள். 3.திட்டமிட்ட காலம் வரை முதலீடு செய்யுங்கள். நிச்சயமாக கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள்.
யோசிச்சுப் பாருங்க? ஒரு நாள் என்பது 24 மணி நேரம். இந்த 24 மணி நேரத்தை நாம் எப்படி செலவிடுகிறோம்?
குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்குகிறோம். கல்லூரி செல்வதோ, அலுவலக வேலையோ அல்லது தொழிலோ, சமையல் வேலையோ சுமார் 8 அல்லது 10 மணி நேரம்.சாப்பிடுவது 1மணி நேரம். உடல் சுத்தம்,குளிப்பது, பயணம் செய்வது 2 மணி நேரம், ஆக மீதமுள்ள 4 அல்லது 5 மணி நேரம்தான் நமக்கென கிடைக்கும் தனிப்பட்ட நேரமாகும்.
நீங்கள் சாதிப்பதானால் இந்த நேரத்திற்குள்தான் முயற்சி செய்ய முடியும். இதைப் பொறுத்துதான் உங்கள் வாழ்க்கையே!
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
Advertisements