முதல்வர் மு.க.ஸ்டாலினையே ஏமாற்றிய ‘டுபாக்கூர்’ உலககோப்பை விளையாட்டு வீரர்..!

Advertisements

ஒரு விளையாட்டு வீரர் உலககோப்பையை வென்று வந்ததாகக் கூறி பித்தளை பாத்திர கடையில் வாங்கிய போலி கோப்பையை காட்டி தமிழ்நாடு முதலமைச்சரையே ஏமாற்றி இருக்கிறார். இந்த நிகழ்வுமிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisements

ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு பல சிலம்பாட்ட போட்டிகளில் வென்றதாக் கூறி பித்தளை பாத்திரக்கடையில் கோப்பைகளை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் பேரும் புகழும் வாங்கி கொடுப்பார்.அதனை சிம்பு மாட்டி விடுவார்.

இதுபோன்ற ஒரு சம்பவம் தான் நிஜத்திலேயே நடந்திருக்கிறது.
ஒரு தனிப்பட்ட நபர் எப்படி முதல்வரை ஏமாற்ற முடியும்? தமிழ்நாட்டை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்ற முடியும் என்ற மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மாற்றுத்திறனாளி ஆகிய ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு .இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரால் வீல்சேர் இல்லாமல் இயங்க முடியாது .அப்படிப்பட்ட இவர் தான் வீல் சேர் கிரிக்கெட் கேப்டன் எனக் கூறிக்கொண்டு சுமார் 20 நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் உலக கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

இதன் மூலம் தனக்கு அரசு வேலை வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறார். அவர்களும் தக்க ஏற்பாடு செய்வதாக கூறி இருக்கின்றனர் . இந்த சமயத்தில் முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர் அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே இன்டர்நேஷனல் வீல் சேர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஒன்று கூடி பேசும் போது இப்படி ஒரு வீரனே இல்லை என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் உளவுத்துறைக்கு புகார் தெரிவித்தனர் .இதனை அடுத்து வினோத் பாபு பற்றி உளவுத் துறையினர் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவர் இதுவரையிலும் வெளிநாடு சென்றது கிடையாது .அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. பாத்திர கடையில் வாங்கிய சில கோப் பைகளை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை வென்றதாக கூறி பல தொழில் அதிபர்களிடம் பணம் பெற்று இருக்கிறார் .

அமைச்சர் ராஜகண்ணப்பனையும் இது போல் ஏமாற்றி இருக்கிறார்
பாத்திரக்கடையில் வாங்கிய கோப்பைகளை வைத்துக்கொண்டு பல முக்கிய பிரமுகர்களுடன் புகைப்படங்களை எடுத்து இதன் மூலம் ஏராளமான பேரிடம் பணம் சம்பாதித்து இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது
இதனை அடுத்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 46 மற்றும் 420 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *