திருமணம் செய்யாமல் பெண்கள் குழந்தை பெறலாம் :சீன அரசு அறிவிப்பு

Advertisements

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என இந்தியா “புகழ்”பெற்ற நிலையில், சீனா
இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது .பொதுவாக சீன நாட்டை
பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது
.இதற்கு காரணம் அங்குள்ள விலைவாசி உயர்வு, குழந்தைகளின் பராமரிப்பு செலவு
,கல்வி செலவு ,என சீனர்களின் தலையில் சுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன .
இதனால் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற சூழ்நிலைக்கு சீன பெற்றோர்கள் வந்து
விட்டார்கள் .இந்த நிலையில் குழந்தைகள் பிறப்பை அதிகரிப்பதற்காக கடந்த சில
ஆண்டுகளாகவே சீன அரசு புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. முன்னதாக
பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 1980 முதல் 2015 வரை
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைதான் பெற வேண்டும் என உத்தரவிட்ட அதே சீன அரசு
,இப்போது முடிந்த அளவு குழந்தைகளை பெற்று தாருங்கள் என்று கேட்கிறது.
இதன் பின்னணியில் வேறொரு விசயமும் இருக்கிறது. சீனாவில் இப்போதைய மக்கள்
தொகை கணக்கெடுப்பில் முதியவர்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள்
.இளைஞர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் .அந்த வகையில் இந்தியாவில்

Advertisements

முதியவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
 இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகளை
பெறலாம் என சீன அரசு அறிவித்தது .மேலும் மகப்பேறு விடுமுறை காலத்தில் ஊதியம்
புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் சென்று வர சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுமுறை,
இளைஞர்கள் காதலிக்கும் வகையில் கல்லூரிகளில் அவர்கள் கடிதம் கொடுத்தால்
காதலிப்பதற்காக லீவு என்ன பல விசித்திரமான அறிவிப்புகளை வெளியிட்டது .
தொடர்ந்து தற்போது திருமணமாகாத பெண்கள் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை
பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. இதேபோல்  வாடகைத் தாய் மூலமும்
பெண்கள் இஷ்டப்படி  குழந்தைகள் பெற்றுக் கொடுக்கலாம். அவர்களுக்கும்
ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை தரப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை
தொடர்ந்து தற்போது சீனாவில் செயற்கை கருவூட்டல் மையங்கள் பெருக
ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *