இந்தியாவிலேயே பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் மையம் சென்னையில் தான்
இருக்கிறது. சென்னை பரங்கி மலையில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில்
முப்படைகளிலும் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு
வருகின்றன .இது மட்டும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும்
இங்கு பயிற்சி தரப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்த இந்தியாவை சேர்ந்த 121
ஆண் அதிகாரிகள் ,36 பெண் அதிகாரிகள், நட்பு நாடுகளைச் சேர்ந்த 5 ஆண் அதிகாரிகள்,
மற்றும் 24 பெண் அதிகாரிகள் தங்களது பயிற்சிகளை நிறைவு செய்தனர். இந்த
நிகழ்ச்சியில் வங்கதேச ராணுவ தலைமை தளபதி அமித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று
புதிதாக லெப்டினட் பதவியேற்க இருக்கும் அதிகாரிகளுக்கு மெடல்களை வழங்கி
வாழ்த்துகாகளை தெரிவித்தார்.
இந்த முறை பயிற்சி பெற்ற பெண்களில் 5 பேர் இந்திய ராணுவ எல்லையில் பணிபுரியப்
போகிறார்கள். முன்னதாக இந்திய ராணுவ எல்லையில் பெண்கள் யாரும்
பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது