எந்த ராசிக்காரங்க யாரோட ‘ஜோடி’ சேரலாம்..?‘கூட்டணி’ வச்சுக்கலாம்.?

Advertisements
Advertisements

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் செய்யும் தொழில், வேலை, அல்லது
வியாபாரம்…இதுவல்லாமல் திருமணம்.. பழகக்கூடிய நட்பு.. இந்த மூன்று
விஷயங்களிலும் வேறு யாரோ ஒருவருடன் கூட்டணி சேர்ந்துதான் வாழ்க்கை
பயணத்தை கடக்க வேண்டியதிருக்கிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் வேறு
எந்த ராசிக்காரர்களுடன் கூட்டணி நட்பு, திருமணம் வைத்துக் கொள்ளலாம் அல்லது
ஆகாத ராசிகள் என்ன? என்பதைப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்டவர்கள். நெருப்பின் குணம்
இருக்கும், அனுசரித்து செல்ல மாட்டார்கள். மேஷம், மிதுனம், சிம்மம், கும்பம் ஆகிய
ராசிகள் ஒத்துப் போகும். இவர்களால் நண்மைகள் உண்டு.மேஷ ராசிகாரர்களுக்கு…
பொருந்தாத ராசிகள் – தனுசு, விருச்சிகம்,கடகம், கன்னி மற்றும் மகரம் ஆகும்.
ரிஷப ராசிக்காரர்கள் ,புத பகவானை அதிபதியாக கொண்டவர்கள். தவறை தட்டிக்
கேட்கக் கூடியவர்கள். நேர்மையானவர்கள். ரிஷப ராசிகாரர்களுக்கு ரிஷபம், கடகம்,
கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் பொருந்தும்… பொருந்தாத ராசிகள் – சிம்மம்,
தனுசு மற்றும் கும்பம் ஆகும்.
மிதுன ராசிக்காரர்கள் அடிக்கடி குணம் மாறுபவர்கள். ஆளுமைத் தன்மை
யுடையவர்கள். மிதுன ராசிகாரர்களுக்கு துலாம், மேஷம், சிம்மம் மற்றும் கும்ப ராசிகள்
பொருந்தும் .மிதுன ராசிகாரர்களுக்கு விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள்
ஒத்துப் போகாது
கடக ராசிக்காரர்கள் எளிதில் உனர்ச்சி வசப்படுபவர்கள். யாரையும் எளிதில் தூக்கி
எறிந்து விடுவார்கள். உங்களுக்கு ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய
ராசிகள் ஒத்துப் போகும். பொருந்தாத ராசிகள் – மேஷம், துலாம் மற்றும் தனுசு ஆகும்.
சிம்ம ராசிக்காரர்கள் சுயநலம் மிக்கவர்கள்.. லட்சியவாதியாக இருப்பார்கள்,
இவர்களுக்கு துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசிகள்
பொருந்தும்.சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், விருச்சிகம், மகரம்
மீனம்மற்றும் கன்னி ஆகும்.
கன்னி ராசிக்காரர்கள் நடைமுறை வாழ்க்கையில் யதார்த்த குணம் கொண்டவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களைக் கவரும் தன்மை அவர்களிடம் இருக்கும். கன்னி
ராசியினருக்கு ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகர ராசிகள் பொருந்தும். மேஷம்,
தனுசு, கும்பம் மிதுனம் ஆகிய ராசிகள் பொருந்தாது.
துலாம் ராசிக்காரர்கள் நடு நிலைமை கொண்டவர்கள். தியாக உணர்வுள்ளவர்கள்.
துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும்
கும்பம் அகும்.பொருந்தாத ராசிகள் – கடகம், மகரம் மற்றும் மீனம் ஆகும்.
விருச்சிக ராசியினர் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். இருப்பினும் வெளிப்படுத்த
மாட்டார்கள்..விருச்சிக ராசிகாரர்களுக்கு கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ராசிகள்
பொருந்தும். மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம் ஆகியவை பொருந்தாத ராசிகள் -.

தனுசு ராசிக்கார்கள் சுய திறமை மிக்கவர்கள்.. சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.
ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் யாரும் கட்டுப்படுத்துவதை விரும்ப மாட்டார்கள்.
தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம்
ஆகும். ரிஷபம், கடகம், கன்னி ,மகரம் ஆகிய ராசிகள் பொருந்தாது.
மகர ராசிக்காரர்கள் யாரையும் நம்பாதவர்கள். மகர ராசிகாரர்களுக்கு ரிஷபம், கன்னி,
மகரம் மற்றும் மீனம் ஆகிய பொருந்தும் ராசிகள் -மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும்
துலாம் ராசிகள் பொருந்தாது.
கும்ப ராசிக்காரர்கள். கொள்கைகளையுடையவர்கள். உதவிகள் செய்பவர்கள்.
இவர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு
ஆகும்.பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் கன்னி ஆகும்.
மீன ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படுவார்கள். அதே சமயம் மிக்க அன்புள்ளவர்கள்,
இவர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகும்.மீன
ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு ஆகும்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *