இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான வேலையற்ற இளைஞர்களை ஏடிஎம்மில்
கொள்ளை அடிக்க பயிற்சி கொடுத்து மிகப்பெரிய சம்பவங்களை நிகழ்த்தி இருக்கும்
ஏடிஎம் பாபாவை இந்திய போலீஸ் தேடுகிறது
கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுஷாந்த் கோல்ப்
சிட்டி காவல் நிலையம் அருகே இருக்கும் ஒரு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து சுமார் 40
லட்சம் ரூபாயை நான்கு இளைஞர்கள் சேர்ந்து திருடி இருக்கிறார்கள். அவர்களை
போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்களிடமிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் மட்டும்
பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஏடிஎம் பாபா என்பவரிடம் திருட்டுத் தொழிலை
கற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.
சுதிர் மிஸ்ரா என்பவன் பெயர் தான் ஏடிஎம் பாபா .இவன் இந்தியா முழுவதும் உள்ள
வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து ஏடிஎம்மில் எப்படி கொள்ளையடிப்பது?
காவல்துறையிடம் இருந்து எப்படி தப்பிப்பது ?ஏடிஎம் பணப்பெட்டியை 15
நிமிடங்களுக்குள் உடைத்து விட்டு வெளியேறுவது எப்பட என பல வழிமுறைகளை
கற்றுக் கொடுத்திருக்கிறான்
இதற்கான பயிற்சியை அடுத்து 15 நாள் நேரடி செயல் விளக்கமும் நடத்தி இருக்கிறான்.
இவனிடம் பயிற்சி பெற்ற ஏராளமான பேர் இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து
ஏடிஎம் வெள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது .ஏடிஎம் பாபாவின் மிக
நெருங்கிய நண்பனான நீரஜ் என்பவன் பிடிபட்டுள்ளான். அவனிடமிருந்து ஏராளமான
ரகசியங்களை போலீசார் கிடுக்கி பிடி போட்டு கறந்து உள்ளனர் . விரைவிலேயேஏடிஎம்
பாபா பிடிபடுவான் என்று நம்பப்படுகிறது
இந்தியாவைமிரட்டும் கொள்ளைக்காரன் ஏடிஎம் பாபா எங்கே? பரபரக்கிறது காவல்துறை
Advertisements