தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10,12 வகுப்பு பொது தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் சந்தித்து ஊக்க தொகை வழங்க உள்ளார்.சென்னை நீலாங்கறையில் இந்த நிகழ்ச்சி வரும் 17 ஆம் தேதி நடக்க உள்ளது.நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது.அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டாலும்,அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்,பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
பனையூரில் உள்ள அலுவலகதில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து வரும் விஜய்,இயக்கத்தை விரிப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.அவரது அறிவுறுத்தலின் படி அம்பேத்கர் பிறந்தநாளென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர்.கடந்த மாதம் பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் “தளபதி விஜய் ஒரு நாள் உணவு சேவையகம்” மூலம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
இந்நிலையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10,12 வகுப்பு பொது தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் சந்தித்து ஊக்க தொகை வழங்க உள்ளார்.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்.ஆனந்த் நேற்று வெளியிட்ட செய்தி தொகுப்பில்,விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் சென்டரில் வைத்து மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் சந்தித்து ஊக்க தொகை வழங்க உள்ளார்.
நடிகர் விஜய் முதன் முதலாக மாணவ மாணவிகளை மற்றும் அவரது பெற்றோர்களை சந்திக்க உள்ளார்.
2026-ல் நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வர விஜய் திட்டமிட்டுள்ளார்.அதற்கான ஆச்சரமே என கூறப்படுகிறது.தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.