அமரக் கல்கிஎழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சுமார் 70 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் கைவண்ணத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வருகிற 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதற்கு முன்னதாக ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் தான் வரலாறு தொடர்பான ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது .
இதற்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வனை தொடர்ந்து வேள்பாரி என்ற நாவல் திரைப்படம் ஆகிறது. அகில இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர் ஷங்கர் இந்த வேள்பாரி நாவலை படமாக்க இருக்கிறார்
ஏற்கனவே இது பற்றிய தகவல்கள் வெளிவந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினமே வேள்பாரி கதையை எனது நெருங்கிய நண்பர் சங்கர் இயக்குகிறார் என உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் போலவே வேள்பாரியும் ஒரு மிகப்பெரிய நாவலாகும் .எழுத்தாளர் சு வெங்கடேசன் ,ஆனந்த விகடனில் கிட்டத்தட்ட 100 வாரங்கள் எழுதிய தொடராகும் .ஆனந்த விகடனில் தில்லானா மோகனாம்பாள் சாண்டில்யன் கதை என ஒரு சில தொடர்கள் தான் 100 வாரங்கள் வெளியாகி இருக்கின்றன .அந்த வகையில் எழுத்தாளர் வெங்கடேசனின் வேள்பாரி வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பால் 100 வாரங்களை கடந்த நாவலாகும்.
வேள்பாரியின் கதை சுருக்கம் இதுதான்…. மேற்கு தொடர்ச்சி மலையில் 14 இன மக்கள் ஒரு குழுவாக வசிக்கிறார்கள். அவர்களை வேதியர் குலம் என்று அழைக்கிறார்கள். இவர்களுக்கு தலைவனாக பாரி என்பவன் பறம்பு மலையை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்கிறான் .இதே சமயத்தில் தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி நடத்தி வருகிறார்கள் .இதில் பரம்பு மலையில் இருக்கும் “வேதவாக்கு’ என்ற ஒரு விலங்கை கைப்பற்றுவதற்கு பாண்டிய மன்னர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் முயற்சி செய்கிறார் .இதை தடுத்து நிறுத்துகிறார் பாரி .
இதனால் போர் ஏற்படுகிறது .குலசேகர பாண்டியன் தனக்கு உதவியாக சேர சோழ மன்னர்களை அழைத்துக் கொண்டு சண்டை இடுகிறார். பறம்பு மலையின் மேல் இருந்தபடி பாரியும், கீழே இருந்தபடி சேர சோழ மன்னர்களும் போரிடுகிறார்கள் .ஒரு கட்டத்தில் பாரியின் நெருங்கிய நண்பனான நீலன் என்பவரை சிறைப்பிடித்து பாரியை கீழே இறங்கு வரும் இறங்கி வரும்படி உத்தரவிடுகிறார்கள். பாரி மன்னன் கீழே இறங்கி வந்தானா? ஜெயித்தது யார் ?என்பது தான் வேள்பாரி கதை. இந்த நாவல் இயற்கைக்கும் மனித நேயத்திற்கும் இன்று நடக்கக்கூடிய போராட்டத்தை தான் அந்த காலத்திலேயே மன்னர்கள் நடத்தி இருக்கிறார்கள் .இது குறித்து பல ஆய்வுகள் செய்து இந்த நாவலை எழுதியிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் வெங்கடேசன் .
இந்த படத்திற்கான பட்ஜெட்
ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிகிறது .இந்த வேட்பாரி கதையில் வரும் போர்க்கள காட்சிகள் வழக்கமான புராண படங்கள் போல் அல்லாமல் தமிழர்களின் வீரக்கலையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இருக்கும் என்று தெரிகிறது.
வேள்பாரி நாவல் திரைப்படமாக உருமாறுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால் இதனை ஐந்து நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது .இதில் நெட் பிலிப்ஸ் மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோகர் ஆகிய இருதரப்பிலும் பேசி முடிவெடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் சங்கர் இந்தியன் இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி களைமுடித்து விட்ட நிலையில்
மேற்கொண்டு இரு படங்களை இயக்கியபிறகு தான் வேள் பாரியை இயக்கவிருக்கிறார். எனவே வேள்பாரி திரைப்படம் வெளிவருவதற்கு சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. இந்த திரைப்படத்தை 10 மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்
வேள்பாரி திரைப்படம் வெளிவரும்போது அது அகில உலகமும் தமிழர்களை பாராட்டும்படியாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.