
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பனிப்புயல் தாக்கியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். எட்டு இலட்சம் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து மாநிலம் வரை பல மாநிலங்களில் கடும் பனிப்புயல் தாக்கியுள்ளது. உறைநிலைக்குக் கீழே வெப்பநிலை உள்ளதாலும் கடுங்குளிர் நிலவுவதாலும் இந்த மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் பனி உறைந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையில் பனிமூடியுள்ளதாலும், தொடர்ந்த பனிப்பொழிவாலும் பதினோராயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் அமெரிக்காவில் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களில் காலநிலை நெருக்கடி அறிவிக்கப்பட்டுள்ளது. லூசியானா, டெக்சாஸ், டென்னசி, கான்சாஸ் ஆகிய இடங்களில் பனிப்புயல் தொடர்பான நேர்வுகளில் குறைந்தது ஏழு பேர் உயிரிந்தனர். மின்கட்டமைப்புகள் சீர்குலைந்ததால் எட்டு இலட்சம் வீடுகளில் மின்சாரம் இன்றித் துண்டிக்கப்பட்டுள்ளது.




