கண்ணைக்கவரும்  மலர்கண்காட்சி…ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்..!          

Advertisements

கோடை விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்குவெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது. தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது.அந்தவகையில்  வியாழக்கிழமை   ஊட்டி தாவரவியல் பூங்காவில்  தொடங்கிய மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இன்று 3-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

Advertisements

மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர் .மேலும்  படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முனை யில்  தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். இதேபோல  தமிழகத்தில் உள்ள பல்லவேறு சுற்றுலா தலங்களில்  கோடை விடுமுறையால்     சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகாணப்படுகிராது .               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *