டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் – டிக்கெட் விற்பனை தொடங்கியது..!

Advertisements
Advertisements

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. டி.என்.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. கோவை மற்றும் திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆனலைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் ஜூன் 12 முதல் 16 வரை 6 ஆட்டங்களும், திண்டுக்கல்லில் ஜூன் 18 முதல் 22 வரை 7 ஆட்டங்களும் நடைபெறுகிறது. இன்று மதியம் 2 மணி முதல் பேடிஎம் (Paytm Insider) வெப்சைடில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனையை பொறுத்தே கவுண்டர் டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று டி.என்.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisements

One thought on “டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் – டிக்கெட் விற்பனை தொடங்கியது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *