செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என்றும் இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.என்று தெரிவித்தார் மேலும் பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக கூறியவிக்கிரமராஜா .
செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து . அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். என்று தெரிவித்தார் மேலும் இதுபோன்றே 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் தள்ளப்பட்டதாகவும். இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டதாக குறிப்பிடவிக்கிரமராஜா . இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு வியாபாரிகள் கூறி வருவதாக அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்