எல்லா காலகட்டதலயும் அந்தந்த கால நிலைய பிரதிபலிக்கிறது மாதிரி படங்கள இயக்குனர்கள் தருவாங்க. சிலர் ஓட படங்கள் காலங்கள் தாண்டியும் பேசப்படும் மற்றும் இன்னைக்கு பார்த்தாலும் மனசுல ஆழமான பாதிப்ப ஏற்படுத்தும். அப்படி பல வருடங்களா தமிழ் சினிமாவுல நிலச்சி நிக்குற மூன்று இயக்குனர்கள் பத்தி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மணி ரத்தினம் :
1983 ஆம் ஆண்டு பல்லவி அனு பல்லவி படத்தின் மூலமா அறிமுகம் ஆகி சுமார் 40 வருடங்களா அதே இளமையொட படங்கள் இயக்கி கிட்டு வராரு. மௌன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், ரோஜா, இருவர், அலைபாயுதே, ஆயுத எழுத்து, இராவணன், பொன்னியின் செல்வன் அப்படினு இவரோட படங்கள் காலம் தாண்டி நிக்குற பொக்கிஷங்கள். எத்தனை இயக்குனர்கள் வந்தாலும் சலிகாம படங்கள அதே liveness ஓட எடுத்துட்டு வராரு. யாருமே முயற்சி பண்ணி எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் படத்த எடுத்து அதா இமாலய வெற்றி அடைய வச்சு இளம் தலைமுறை இயக்குனர்கள்ல வாய் பிளக்க வச்சு இருக்காரு.
விடியோவை பார்க்க : https://youtu.be/Dq_4dbXlHCI
ஷங்கர்:
1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” படத்தின் மூலமா தரமான மற்றும் திறமையான இயக்குநர் என்கிற அடையாளத்தை மக்கள் மனசுல முதல் படத்திலேயே உருவாக்கி விட்டரு ஷங்கர். அதுக்கு அப்பறம் இவர் இயக்கத்தில் வந்த இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ போன்ற படங்களின் மூலமா இன்னும் அழுத்தமா இடம் பிடிச்சிடாரு. இப்பவும் இன்று இருக்க கூடிய இயக்குனர்கள் கூட சரிசமமாக போட்டி போட்டு அதே அளவு effort போட்டு படங்கள உருவக்குறார். சுமார் 30 வருடங்களா திரை துறையில successfull லீடிங் இயக்குநர் ஆ இருக்காரு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.
சுந்தர் சி:
1995 ஆம் ஆண்டு “முறைமாமன்” படத்தின் மூலமா அறிமுகம் ஆகி சுமார் 28 வருடங்களா இந்த modern தலைமுறை ஓட pulse புரிஞ்சி எடுக்குற ஒரு ட்ரெண்ட் செட்டிங் நகைச்சுவை கமர்சியல் இயக்குநர் அப்படினா அது நம்ப சுந்தர் சி அவர்கள் தான். அந்தந்த கால நகைச்சுவை மற்றும் நடிப்பு ஆளுமைகளை சரியா பயன்படுத்தி ஹிட் கொடுகுறதுல இவர் கைதேர்ந்தவர். மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு, அரண்மனை போன்ற படங்கள் மூலமா மக்கள் மனசில ஒரு தனி இடம் பிடிச்சி இப்ப வர தன்ன updated ஆ வச்சு படத்த எடுகுறாரு.
Vera level directors,👏👏👏
Good information 👍