தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப் படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்றும்,
தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.