அந்தக் காலத்தில் சிறுவர் சிறுமிகள் கள்ளன் ,போலீஸ் விளையாட்டு
விளையாடுவார்கள். உண்மையிலேயே இந்த விளையாட்டு மிகப்பெரிய
விளையாட்டாகும். காரணம் திருடவும் மிகப்பெரிய திறமை வேண்டும் .அவனைப்
பிடிக்கும் காவல்துறைக்கும் மிகப்பெரிய திறமை இருக்க வேண்டும்.
அந்த வகையில் கோவையில் சவால் விட்ட ஒரு திருடனை காவல்துறையினர் சுற்றி
வளைத்து கைது செய்துள்ளனர்.
அந்த திருடனை பிடிப்பதற்கு 30 போலீஸ் கொண்ட 2 படையும் மூன்று மாதங்களும் ஆகி
இருக்கிறது .சுமார் 300 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். 200 சிசிடிவி
கேமராக்களை பாலோ அப் செய்திருக்கிறார்கள். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு
அந்த பலே திருடனை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் நடந்தது கோவையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில்…
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவன் சிவச்சந்திரன் .இவனுக்கு வயது 57 ஆகிறது.
இவன் ஒரு பலே திருடன் ஆவான் .பீளமேடு, சிங்காநல்லூர் பகுதியில் மட்டுமே திருட்டு
தொழிலை செய்து வந்த இவனை போலீசார் பிடித்த போது அவனிடம் இருந்து 57 பவுன்
தங்க நகை, 32 லட்ச ரூபாய் ரொக்கம்மற்றும் ஒரு இன்னோவா கார், இரண்டு மோட்டார்
பைக்குகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
கோவை மாநகர காவல் துறை உதவியாளர் சந்தீஷ் தலைமையிலான படையினர்தான்
இந்த திருடனை பிடித்திருக்கின்றனர். இதனால் தொடர் திருட்டுகள் நடந்த பீளமேடு,
சிங்காநல்லூர் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கோவை புறநகர் பகுதியில் உள்ள அன்னூர் அருகே இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில்
உள்ள சிசிடிவி கேமரா மூலம் சிவச்சந்திரன் பிடிபட்டிருக்கிறான்.
கைதான சிவச்சந்திரன் தனது திருட்டு அனுபவங்களை காவல்துறையினரிடம் பகிர்ந்து
உள்ளான் அவன் கூறியிருப்பதாவது,,,
திருட்டுத் தொழில் செய்வதற்கு நேரம்தான் மிக முக்கியம். அதிகாலை 2 மணி முதல்
மூன்று முப்பது மணி தான் திருடுவதற்கு சரியான சமயம் ஆகும். அதே போல் திருடும்
இடத்தை முதலில் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் .ஒரு வீட்டை குறி வைத்தால்
குறைந்தது மூன்று நாட்களுக்கு அந்த வீட்டை பின்தொடர வேண்டும் .பொதுவாக ஆள்
நடமாட்டம் குறைந்த வீடுகளை தேர்வு செய்ய வேண்டும். திருடச் செல்லும் பொழுது
எல்லா பொருள்களுக்கும் ஆசைப்படக்கூடாது. குறிப்பிட்ட பொருள் கையில் கிடைத்தால்
அடுத்த நிமிடம் இடத்தை காலி செய்துவிட வேண்டும் .ஒரு திருடனுக்கு மிக முக்கியம்
பூட்டை திறப்பது தான். ஆகவே பூட்டை திறக்கும் டெக்னிக் தெரிந்து இருக்க வேண்டும்.
சாதாரண இரும்பு கம்பி மூலம் எப்பேர்ப்பட்ட பூட்டையும் திறந்து விடலாம் என்று
கூறியிருக்கிறான்