பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதலிடம் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று காலை, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அண்ணா நூலகத்தில் வெளியிட்டார்.
இதில் மாணவிகள், 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பொதுத்தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.