இந்தியக் கணவர்கள் மீது உலகில் வேறெங்கிலும் இல்லாதபடி “இ.பி.கோ” குற்றச்சாட்டுகள் எக்கச் சக்கமாகவே உள்ளன. சட்டப்படி தன்னைத் தண்டிக்க கூடிய குற்றங்கள் எது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. மனைவியை திட்டினாலே கூட சிறைத்தண்டனை என்பது தெரியாமல் “ராமாயண’’ காலத்து கணவர்களாக இருக்கிறார்கள். ’கல்’ ஆனாலும் கணவன்,’புல்’ ஆனாலும் புருசன் எனப் பெண்கள் எவ்வளவுதான் பொறுத்துப் போனாலும், இந்தியக் கணவர்கள் இன்னும் அவர்களை சரி,வர புரிந்து கொள்ளவில்லை.
குடித்துவிட்டு வந்து மனைவியரை அடிக்கும் கணவர்கள் உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகம் இருக்கிறார்கள். இந்தியப் பெண்களில் பெரும்பாலான பேர் தாங்கள் சிலுவையில் அறையப்படப் போவது தெரியாமல்தான் மூகூர்த்த நேரம் பார்த்து கழுத்தை நீட்டுகின்றனர்.இங்குள்ள குடும்பத் தலைவிகள் பற்றிய ஒரு ஆய்வறிக்கை ஒட்டு மொத்த இந்தியர்களும் வேதனைப்படக் கூடிய ஒரு விஷயம்..
ஆண்டுக்கு இங்கு 5 கோடி பெண்கள் தங்கள் கணவர்களின் நேரடி வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் 20 சதவீத மனைவியர்கள்தான் சுதந்திர மனைவியராக வாழுகிறார்கள். மீதமுள்ள 80 சதவீத மனைவிகளும் சமரசமாக வாழும் போக்கை கற்றுக் கொண்டு கணவர்களுக்கு இன்னமும் அடிமைகளாகவே இருக்கிறார்கள். 1980 களில் 5 சதவீதமாக இருந்த விவாகரத்து வழக்குகள் இப்போது 19 சதவீதமாகி விட்டன.
இந்தியக் கணவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா? வெளியே உள்ள கோபத்தையும், எரிச்சலையும் வீட்டில் வந்து காட்டுகிறார்கள். தான் என்ன நினைக்கிறோமோ அப்படித்தான் மனைவி இருக்கவேண்டும் எனக் கருதுகிறார்கள்.பெற்றோர்,மற்றும் உறவினர்களைத் தூக்கியெறிந்து விட்டு மனைவி, தன்னை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என்று நினக்கிறார்கள். பெண்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பது மட்டுமல்லாமல், வேலையாளாகவே கருதுகிறார்கள். இன்னும், கத்துவது, அடிப்பது, உதைப்பது எனக் குற்றப்பட்டியல்கள் நீளுகிறது.ஆனால் இவையெல்லாம் சட்டப்படி தண்டிக்க கூடிய குற்றங்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
1950 களில் நவீன திருமணச் சட்டங்கள் உருவானதில் இருந்து கடந்த 2006 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடும்ப வன்மமுறைச் தடுப்புச் சட்டம் வரை கணவர்களுக்கான “கிடுக்கிப்பிடிகள்” நிறையவே இருக்கின்றன. பெண் வீட்டிலிருந்து கொண்டு வரும் சீர் வரிசையில் நகைகள், துணிகளை கணவன் பயன்படுத்த முடியாது. மனைவியை வேலயில் சேரக் கூடாது என்றோ, ராஜினாமா செய்யச் சொல்லியோ கட்டாயப்படுத்த முடியாது.
மனைவி விருப்பப் பட்டால் மட்டுமே அவளோடு சந்தோசமாக இருக்க முடியும். மீறி வலுக்கட்டாயப் படுத்த முடியாது. வீட்டிலிருக்கும் மனைவியை கடின வார்த்தைகளால் திட்டக் கூடாது. திட்டினாலே சிறைத் தண்டனை உண்டு. அவளை உணர்வு ரீதியாக்வும், பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது. மனைவியை “ ஒரு குழந்தை பெற்றுத் தரவில்லை” என அவமானாப் படுத்தக் கூடாது. இது போன்ற ஏராளமான சட்ட விஷயங்கள் தெரியாமல் ஆண்கள் வெற்றுப் பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேற்படி விஷயத்தில் மனைவியாகப்பட்டவள் ஒரு புகார் செய்தால் போதும். ஆண்கள் கம்பி எண்ண வேண்டியதுதான்.
“போனால் போகட்டும் போடா” என பெண்கள் விட்டு கொடுத்துச் செல்வதால்தான் ஆண்கள் இப்படி அவர்கள் மீது அடிதடி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்பானவர்களே… பொறுமைசாலியான பெண்கள் இதற்கெல்லாம் “சேத்து மாத்து” பழி வாங்கும் காலம் ஒருவேளை வரலாம். இப்போதெல்லாம் இந்தியா முழுவதும் 5 ஆணுக்கு 1 பெண் என்ற முறையில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். 93 சதவீதப் பெண்கள் உயர் கல்வியில் சேர ஆரம்பித்து விட்டனர்.
இந்தியாவில வேலை பார்க்கும் இளம் பெண்களில் 25 சதவீதம் பேர் தங்கள் கணவர்கள் பற்றி தாங்களே தீர்மானிக்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் தங்களுக்கு 26 வயது முதல் 30 வயது வரை திருமணம் நடந்தால் போதுமானது என்று கருதுகிறார்கள்.ஆண்களுக்கு எதிராக பெண்கள் காவல் நிலையம் செல்லவும் தயாராகி விட்டர்கள். 1995 களை ஒப்பிடும் போது இப்போது காவல்நிலைய உதவியை நாடும் பெண்கள். 40 சதவிதம் அதிகரித்து இருக்கிறது.
சரி.. எப்படித்தான் பெண்களுடன் குடுடித்தனம் நடத்துவது?:”இட்ஸ் வெரி சிம்பிள்” பெண்களை புகழ்ந்து பேசுவதன் மூலம் அவர்களை மிக எளிதாக ஏமாற்றி விடலாம். இந்தியாவில் 60 சதவீதம் இது சாத்தியம் என்கிறது சர்வே… கணவர்கள் தங்களை அடிக்கடி ‘ஐஸ்’ வைப்பதயும். அடிக்கடி மல்லிகைப்பூ வாங்கித் தருவதையும் அடிக்கடி ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்வதையும்,நேரம் கிடைக்கும் போது கட்டிப் பிடிப்பதையும்தான் இங்குள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
நண்பர்களே..திருமணம் எனபது ‘புனிதம்’ மட்டுமல்ல.. அதில் பாலியல் சந்தோசமும் கலந்திருக்கிறது. அதனை “ஜில்லுன்னு ஒரு காதல்” போல அனுபவிக்க வேண்டுமே தவிர “திருப்பாச்சி” மாதிரி அரிவாளைத் தூக்கிகொண்டு தெமனா வெட்டாக வலம் வரக் கூடாது.
காலம் பெண்கள் கைக்கு மாறிக் கொண்டிருக்கிரது. இப்பொழுதெல்லாம் பல குடும்பங்களில் கோவை சரளா மாதிரி ஆண்களைத் தூக்கி பந்தாடத் தொடங்கி விட்டர்கள்.அவர்களை அனுசரித்துப் போவதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் பெற முடியும். பெண் ஆக்கவும் தெரிந்தவள்..அழிக்கவும் தெரிந்தவள்.. அவர்கள் உங்கள் அன்புக்குறியவர்கள். “அத்தான்… மாமா… என்னங்க..” என உங்களை ஆசா, பாசத்துடன் அழைக்கும் அவர்களை மூதேவி, அடங்காப்பிடாரி என வெறுத்து பேசாதீர்கள்.
காரணம், சமீப காலமாக தங்களுக்கு பிடிக்காத கணவர்களை விட்டுத்தள்ளி விட்டு மனதுக்கு பிடித்த வேறு ஒருவருடன் வாழ்க்கை நடத்தவும் பெண்கள் தயாராகி வருகிறார்கள்.
பெண்களின் மனது ஆறு போல.. அதனை அளவிட முடியாது.. அனேகமாக உங்கள் மனைவியிடம் நீங்கள் பாட வேண்டிய பாடல் இதுதான்..” சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச, என் இதயம் உன்னைச் சுற்றுதே…”
மனைவிகளிடம் கணவர்கள் போடும் ஆட்டம் – ‘ஜாக்கிரதை’
Advertisements