கோட்டாட்சியர் காலில் விழுந்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு ..

Advertisements

பழனி மலை அடிவாரத்தில் உள்ள வீடுகளை அகற்ற ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கோட்டாட்சியர் காலில் விழுந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது

Advertisements

விடியோவை பார்க்க : கோட்டாட்சியர் காலில் விழுந்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு … | GEM TV NEWS – YouTube

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அண்ணா செட்டி மடத்தை ச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக மலை அடிவார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்கு மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவில் விரிவாக்க பணிகளில் ஈடுபடுவதற்காக ஆய்வுக்கு வந்த கோட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வட்டாட்சியர் தாசில்தார் வந்தபோது அவர்களுடன் வந்த கோவில் அதிகாரிகளை வரக்கூடாது எனவும் நாங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் எங்களுக்கு பட்டா மட்டுமே வேண்டும் எனவும் எங்களுக்கு மாற்று இடம் வேண்டாம் எனவும் கூறி கோயில் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த திமுக கவுன்சிலர் தீனதயாளன் கோட்டாட்சியர் காலில் விழுந்து இந்தப் பகுதியை  நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டாம் எனவும் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கி தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் எனவும் கோட்டாட்சியர் காலில் விழுந்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *